வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கீழவளவு மலைகள்

இயற்கையை காதலிப்பவர்களுக்கு, இயற்கை தன்னை பல பரிமாணங்களில் காட்சி தரும். அருவியாக, நதியாக, கடலாக, காடுகளாக, மலைகளாக, பனி மலையாக என இயற்கை பல்வேறு பரிமாணங்களில்  காட்சியளிக்கும். இவைகள், பார்பவர்களின் கண்களை கவர்ந்து, மனதை வருடி, பின்பு மெல்ல நம்மை தனக்கு அடிமையாக்கும். இது காதலின் சக்தி.


இந்த நீரும் மலைகளும் ஒரே மாதிரியான தன்மைகள் உடையவை. கிடைக்கும் இடத்திற்கேற்றவாறு தன் உருவத்தையும், அழகையையும் மாற்றிக் கொண்டே இருக்கும். அதே சமயம் குளிர்ச்சியாகவும் இருக்கும். இரண்டும் சேர்ந்தே பயணிக்கக் கூடியவை. அந்த இரண்டும் கண்களில்பட்டது இனிமையானவை.

கழுகுமலை வெட்டுவான் கோவில்

மதுரையிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கழுகுமலை. கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகாமையிலுள்ள ஒரு சிறிய ஊராகும்.

எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் சிற்பக் கோவில் ஆகியனவற்றைக் காட்டிலும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்பிற்குரியதாகும்.


ஒரு மலையை பிற்காலத்தில் வாழ்பவர்களுக்கு இப்படி வடிவமைத்து தந்து நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் சிற்பிகள். ஒவ்வொரு வெட்டுகளிலும் வலைவுகளிலும் அவர்களின் திறமையும் ஆழ்ந்த சிந்தனையும் பார்ப்பவர்களின் கண்களின் குடிகொண்டுவிடுகிறது.

வியாழன், 26 செப்டம்பர், 2013

அரிட்டாபட்டி மலைகள்

மலைகள் எப்போதுமே கம்பீரமாக தோற்றமளிக்கக் கூடியவை. அந்த கம்பீரங்களின் தோற்றம் சரியான கோணங்களில் மட்டுமே காண முடிகிறது.


மலைகளை நான் ரசிப்பது இதனாலேயே...

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

திருவாதவூர் ஓவா மலை...

திருவாதவூர் மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப் பெருமைகள், பெரும் புலவர் கபிலர் மற்றும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய இருவரும் பிறந்த ஊர்.


சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த மலையின் பெயர் ஓவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு வாழ்ந்துவரும் மக்களால் அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் இம்மலை உள்ளது.