நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் வழியில் உள்ளது குட்டப்பட்டி
என்னும் சிற்றூர். ஊருக்கு மேற்கு பகுதியில்
மலையில் அமைந்துள்ள பள்ளத்துக்காடு என்னும் அழகிய மலை
கிராமத்திற்க்கு தம்பி மது என்னை
அழைத்துச் சென்றான். ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த
மரங்களுக்கிடையே ஒரு பயணம் இடையில்
சிறு ஓடையில் நீர் சலசலத்து
கொண்டிருந்தது. பறவைகளின் சத்தம் ஆங்காங்கே ஒலித்துக்
கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் காட்டைக்
கடந்து மலைப்பயணம் ஆரம்பமாகியது. கூடவே வலியும் கால்களில்
ஏறிக்கொண்டது.
வியாழன், 17 அக்டோபர், 2013
திங்கள், 14 அக்டோபர், 2013
இயற்கையின் தூரிகையில் பட்டாம்பூச்சிகள்...
நத்தம் அருகேயுள்ள மலைப் பகுதிக்கு ஒருமுறை
சென்ற போது வண்ணத்துப்புச்சிகளின் இருப்பிடத்திற்கே சென்றுவிட்டது போல ஒரு காட்சி.
எங்கு பார்த்தாலும் வண்ணத்துப்புச்சிகளின் படபடப்பான இறக்கைகளின் துடிப்புகளை காண முடிந்தது.
ஒரு சில பட்டாம்பூச்சிகளை நிழற்படம் எடுத்துவிடலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். பல முறை முயன்று, பல தோல்விகளுக்கு பின்னர்,
கிடைத்த சில காட்சிகள்.
வெள்ளி, 11 அக்டோபர், 2013
கொங்கர் புளியங்குளம் - 1
மதுரை நாகமலைப் புதுக்கோட்டைக்கும் செக்கானூரணிக்கும்
இடையில் சாலையின் வடக்கு திசையில் அமைந்துள்ளது அழகிய கொங்கர் புளியங்குளம் மலைக் குன்று.
மலைக்கு செல்லும் வழியில் அழகிய மாயன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முன்புறம் உள்ள இரண்டு அரச மரங்கள் கோவிலுக்கு மேலும் அழகு சேர்கிறது. மாயன் கோவிலைக் கடந்து மலை அமைந்திருக்கும் பகுதியை
நோக்கி நடந்தேன். மிக நீண்டத் தோற்றத்துடன் காட்சி தந்தது மலை.
திங்கள், 7 அக்டோபர், 2013
இளஞ்சிவப்பு நகரம் ஜெய்பூர்
ஜெய்பூர் கோட்டைகளும் அரண்மனைகளும் நிறைந்த
நகரம். ஒவ்வொரு அரண்மனைகளிலும் கோட்டைகளிலும் அதனை உருவாக்கியவர்களின் கலைத் திறமைகள்
இன்றும் அழியாமல் அழகாக உள்ளது. ஒருமுறை ஜெய்பூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நழுவவிடாதீர்கள்.
ரசனைக்கு தீனிபோடும் நகரம் ஜெய்பூர்.
தம்பி ஜெய்பூரில் வேலைப் பார்த்து கொண்டிருந்தான்.
தொடர்ச்சியான பல அழைப்புகளில் ஒன்றன் முடிவாக ஜெய்பூரை சென்றடைந்தேன். சென்ற பிறகுதான்
அவன் அழைத்ததன் அர்த்தம் எனக்குப் புரிந்தது.
சாலையோரம் உள்ள அனைத்து கோட்டைகளும் இளஞ்சிவப்பு
நிறத்தில் இருந்தன. மொத்தத்தில் திருப்பும் திடையெல்லாம் இளஞ்சிவப்புதான் எங்களை வரவேற்றது.
அதில் மிக முக்கியமான, ஜெய்பூர் என்றாலே
நினைவிலிருந்து நீங்காமல் நின்று கொண்டிருப்பது இந்த “ ஹவா மகால் “ தான்.
ஞாயிறு, 6 அக்டோபர், 2013
மனதை மயக்கும் மசூரி மலைகள்
மசூரி என்றாலே குளிர்ச்சி தான் நினைவுகளுக்கு
வருகிறது. பள்ளி காலத்தில் இந்தியாவின் மிக முக்கிய கோடைவாசத் தளங்களில் மசூரியைப் பற்றி
படித்ததுண்டு. பணி நியமித்தமாக உத்தரகாண்டில் இருந்த பொழுது, மசூரிக்கு சென்று வரும்
வாய்ப்பு கிட்டியது. சொல்லிலும், எழுத்திலும் விவரிக்க முடியாத பசுமை... குளிர்ச்சி.
ஊசியிலைக் காடுகள் ஒருபக்கமாகவே சாய்ந்திருந்தன...
மஞ்சுகளின் சுமை தாங்காமல்.
வெள்ளி, 27 செப்டம்பர், 2013
கீழவளவு மலைகள்
இயற்கையை காதலிப்பவர்களுக்கு, இயற்கை தன்னை பல
பரிமாணங்களில் காட்சி தரும். அருவியாக,
நதியாக, கடலாக, காடுகளாக, மலைகளாக,
பனி மலையாக என இயற்கை
பல்வேறு பரிமாணங்களில் காட்சியளிக்கும்.
இவைகள், பார்பவர்களின் கண்களை கவர்ந்து, மனதை
வருடி, பின்பு மெல்ல நம்மை
தனக்கு அடிமையாக்கும். இது காதலின் சக்தி.
இந்த நீரும் மலைகளும் ஒரே மாதிரியான தன்மைகள்
உடையவை. கிடைக்கும் இடத்திற்கேற்றவாறு தன் உருவத்தையும், அழகையையும் மாற்றிக் கொண்டே
இருக்கும். அதே சமயம் குளிர்ச்சியாகவும் இருக்கும். இரண்டும் சேர்ந்தே பயணிக்கக் கூடியவை.
அந்த இரண்டும் கண்களில்பட்டது இனிமையானவை.
கழுகுமலை வெட்டுவான் கோவில்
மதுரையிலிருந்து
சுமார் 150 கி.மீ தொலைவில்
அமைந்துள்ளது கழுகுமலை. கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகாமையிலுள்ள ஒரு சிறிய ஊராகும்.
எல்லோராவிலுள்ள
கைலாசநாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம்
சிற்பக் கோவில் ஆகியனவற்றைக் காட்டிலும்
கழுகுமலை வெட்டுவான் கோயில் தனிச்சிறப்பு மிக்கது.
காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால்
ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்களின்
உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்பிற்குரியதாகும்.
ஒரு மலையை பிற்காலத்தில் வாழ்பவர்களுக்கு
இப்படி வடிவமைத்து தந்து நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் சிற்பிகள். ஒவ்வொரு வெட்டுகளிலும்
வலைவுகளிலும் அவர்களின் திறமையும் ஆழ்ந்த சிந்தனையும் பார்ப்பவர்களின் கண்களின் குடிகொண்டுவிடுகிறது.
வியாழன், 26 செப்டம்பர், 2013
செவ்வாய், 24 செப்டம்பர், 2013
திருவாதவூர் ஓவா மலை...
திருவாதவூர் மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்,
மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது.
திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப் பெருமைகள்,
பெரும் புலவர் கபிலர் மற்றும்
திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய
இருவரும் பிறந்த ஊர்.
சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை
தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த
மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த
மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த
மலையின் பெயர் ஓவாமலை அல்லது
பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு
வாழ்ந்துவரும் மக்களால் அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல்
துறையினரின் பாதுகாப்பில் இம்மலை உள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









