வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கழுகுமலை வெட்டுவான் கோவில்

மதுரையிலிருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கழுகுமலை. கழுகுமலை கோவில்பட்டிக்கு அருகாமையிலுள்ள ஒரு சிறிய ஊராகும்.

எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோவில் மற்றும் மாமல்லபுரம் சிற்பக் கோவில் ஆகியனவற்றைக் காட்டிலும் கழுகுமலை வெட்டுவான் கோயில் தனிச்சிறப்பு மிக்கது. காரணம் கழுகுமலை கடினமான பாறை அடுக்குகளால் ஆனது. இவ்விடத்தில் சிற்பங்களைச் செதுக்கியிருக்கிறார்கள் என்றால் நம் முன்னோர்களின் உழைப்பும், தொழில்நுட்பமும் வியப்பிற்குரியதாகும்.


ஒரு மலையை பிற்காலத்தில் வாழ்பவர்களுக்கு இப்படி வடிவமைத்து தந்து நம்மை வியப்பில் ஆழ்த்தியுள்ளனர் சிற்பிகள். ஒவ்வொரு வெட்டுகளிலும் வலைவுகளிலும் அவர்களின் திறமையும் ஆழ்ந்த சிந்தனையும் பார்ப்பவர்களின் கண்களின் குடிகொண்டுவிடுகிறது.



மலையின் உச்சியில் உள்ள வெட்டுவான் கோவிலானது கோட்டைச் சுவர்களால் சூழப்பட்டது போன்று முற்றிலும் மலையையே வெட்டி உருவாக்கியுள்ளனர். இதனை உருவாக்க அவர்கள் எடுத்தக்கொண்ட காலம்பற்றி தெரியவில்லை, ஆனால் இதனை இன்று உருவாக்குவதென்றால் பல வருடங்கள் ஆகும் என்பது உண்மை. சிற்பக் கலையின் சிகரம் என்று வர்ணிக்கூடிய வகையில் இக்கோவிலை உருவாக்கியுள்ளனர்.



மலையில் கோவிலை வெட்டுவதற்கு முன் எப்படி இப்படி ஒரு கோவிலை உருவாக்க வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் என்பதை நீங்கள் ஒருமுறை நினைத்து பாருங்கள்... இந்த வெட்டுவான் கோவிலின் சிறப்புகள் உங்களுக்குள் ஒட்டிக்கொள்ளும்.



மனிதர்களுக்கு வரலாற்றை அறிந்துகொள்ளவும், அதனை பாதுக்காக்கவும் விருப்பம் இல்லாத காரணத்தினால், நாம் இழந்த வரலாற்று சின்னங்கள் பல. இன்று நாம் காண்பதெல்லாம் அவற்றின் எச்சங்களே ஆகும். இப்போது இருக்கும் அந்த எஞ்சிய எச்சங்களையாவது நாம் கண்டுகொண்டு அதனை பாதுகாத்து எதிர்கால தலைமுறைக்கு தமிழக வரலாற்றினை கொண்டு செல்வோம்.

2 கருத்துகள்:

  1. தமிழர்களின் கட்டடக்கலைக்கு அற்புதமான எடுத்துக்காட்டான கழுகுமலை வெட்டுவான் கோயிலும், சமணச்சிற்பங்களும் அருமை.

    - அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்.

    பதிலளிநீக்கு
  2. Thanks for the wonderful pics. I never knew that such a rock cut temple exists in Tamilnadu. Looks similar to Mahabalipuram rock cut temples. These temples are in fact more refined and beautiful.

    பதிலளிநீக்கு