செவ்வாய், 24 செப்டம்பர், 2013

திருவாதவூர் ஓவா மலை...

திருவாதவூர் மதுரையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில், மதுரையின் வடகிழக்கு பகுதியான மேலூர் வட்டத்தில் அமைந்துள்ளது. திருவாதவூரின் சங்ககால வரலாற்றுப் பெருமைகள், பெரும் புலவர் கபிலர் மற்றும் திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் ஆகிய இருவரும் பிறந்த ஊர்.


சுமார் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்பிராமி எழுத்துக்களை தாங்கி கொண்டு, தமிழ்த்தாய் அந்த மலையை பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவள் இல்லையென்றால் இந்த மலையும் பூமிபந்திலிருந்து காணாமல் போயிருக்கும். இந்த மலையின் பெயர் ஓவாமலை அல்லது பஞ்ச பாண்டவர் மலை என்று இங்கு வாழ்ந்துவரும் மக்களால் அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையினரின் பாதுகாப்பில் இம்மலை உள்ளது.




நீல நிற வானத்திற்க்கு இடையில் நிற்கும் மலைகள் அழகா ? இல்லை வானம் அழகா ?




தனிமையில் இனிமை என்பது இம்மலை குன்றுக்கு சரியாக பொருந்தும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக