மலைகள் எப்போதுமே கம்பீரமாக தோற்றமளிக்கக்
கூடியவை. அந்த கம்பீரங்களின் தோற்றம் சரியான கோணங்களில் மட்டுமே காண முடிகிறது.
மலைகளை நான் ரசிப்பது
இதனாலேயே...
இந்த சிறு
பாறை இங்கு எவ்வாறு வந்திருக்கும் ? என்ற கேள்வி மனதில் எழும் பொழுது புவியின் மாற்றங்களை
பற்றி அறிய முடிகிறது. பூகோல மாயங்கள் எல்லாம் கண் முன்னே நிற்கின்றன... எவ்வித சாயங்கள்
ஏதுமின்றி.
எது வாழ்வில் நிச்சயம் ? என்ற கேள்விக்கு இந்த சிறிய பாறைகள் நிற்கும் தொனி எனக்குள் விடையையும் நம்பிக்கையையும் அளிக்கிறது.
ஒவ்வொரு பாறையும் ஒவ்வொரு அழகில் லயித்திருக்கிறது...
நம் மனதை வசியபடுத்துவதற்காக... வசியமானதா ???





அரிட்டாபட்டியின் அழகை அற்புதமாகப் பதிவு செய்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு- அன்புடன்,
சித்திரவீதிக்காரன்