வியாழன், 17 அக்டோபர், 2013

அழகிய உயரத்தில் பள்ளத்துக்காடு...

நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் வழியில் உள்ளது குட்டப்பட்டி என்னும் சிற்றூர். ஊருக்கு மேற்கு பகுதியில் மலையில் அமைந்துள்ள பள்ளத்துக்காடு என்னும் அழகிய மலை கிராமத்திற்க்கு தம்பி மது என்னை அழைத்துச் சென்றான். ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே ஒரு பயணம் இடையில் சிறு ஓடையில் நீர் சலசலத்து கொண்டிருந்தது. பறவைகளின் சத்தம் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் காட்டைக் கடந்து மலைப்பயணம் ஆரம்பமாகியது. கூடவே வலியும் கால்களில் ஏறிக்கொண்டது.

திங்கள், 14 அக்டோபர், 2013

இயற்கையின் தூரிகையில் பட்டாம்பூச்சிகள்...

நத்தம் அருகேயுள்ள மலைப் பகுதிக்கு ஒருமுறை சென்ற போது வண்ணத்துப்புச்சிகளின் இருப்பிடத்திற்கே சென்றுவிட்டது போல ஒரு காட்சி. எங்கு பார்த்தாலும் வண்ணத்துப்புச்சிகளின் படபடப்பான இறக்கைகளின் துடிப்புகளை காண முடிந்தது. ஒரு சில பட்டாம்பூச்சிகளை நிழற்படம் எடுத்துவிடலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். பல முறை முயன்று, பல தோல்விகளுக்கு பின்னர், கிடைத்த சில காட்சிகள்.

வெள்ளி, 11 அக்டோபர், 2013

கொங்கர் புளியங்குளம் - 1

மதுரை நாகமலைப் புதுக்கோட்டைக்கும் செக்கானூரணிக்கும் இடையில் சாலையின் வடக்கு திசையில் அமைந்துள்ளது அழகிய கொங்கர் புளியங்குளம் மலைக் குன்று. மலைக்கு செல்லும் வழியில் அழகிய மாயன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முன்புறம் உள்ள இரண்டு அரச மரங்கள் கோவிலுக்கு மேலும் அழகு சேர்கிறது. மாயன் கோவிலைக் கடந்து மலை அமைந்திருக்கும் பகுதியை நோக்கி நடந்தேன். மிக நீண்டத் தோற்றத்துடன் காட்சி தந்தது மலை.

கொங்கர் புளியங்களம் - 2

கொங்கர் புளியங்குளம் மலையின் உச்சிக்கு செல்லும் வழியிலும், உச்சியில் அமைந்துள்ள கோவில்களின் தோற்றமும் நிழற்படங்களில்...

திங்கள், 7 அக்டோபர், 2013

இளஞ்சிவப்பு நகரம் ஜெய்பூர்

ஜெய்பூர் கோட்டைகளும் அரண்மனைகளும் நிறைந்த நகரம். ஒவ்வொரு அரண்மனைகளிலும் கோட்டைகளிலும் அதனை உருவாக்கியவர்களின் கலைத் திறமைகள் இன்றும் அழியாமல் அழகாக உள்ளது. ஒருமுறை ஜெய்பூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நழுவவிடாதீர்கள். ரசனைக்கு தீனிபோடும் நகரம் ஜெய்பூர்.


தம்பி ஜெய்பூரில் வேலைப் பார்த்து கொண்டிருந்தான். தொடர்ச்சியான பல அழைப்புகளில் ஒன்றன் முடிவாக ஜெய்பூரை சென்றடைந்தேன். சென்ற பிறகுதான் அவன் அழைத்ததன் அர்த்தம் எனக்குப் புரிந்தது.

சாலையோரம் உள்ள அனைத்து கோட்டைகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன. மொத்தத்தில் திருப்பும் திடையெல்லாம் இளஞ்சிவப்புதான் எங்களை வரவேற்றது.

அதில் மிக முக்கியமான, ஜெய்பூர் என்றாலே நினைவிலிருந்து நீங்காமல் நின்று கொண்டிருப்பது இந்த “ ஹவா மகால் “ தான்.  

ஞாயிறு, 6 அக்டோபர், 2013

மனதை மயக்கும் மசூரி மலைகள்

மசூரி என்றாலே குளிர்ச்சி தான் நினைவுகளுக்கு வருகிறது. பள்ளி காலத்தில் இந்தியாவின் மிக முக்கிய கோடைவாசத் தளங்களில் மசூரியைப் பற்றி படித்ததுண்டு. பணி நியமித்தமாக உத்தரகாண்டில் இருந்த பொழுது, மசூரிக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டியது. சொல்லிலும், எழுத்திலும் விவரிக்க முடியாத பசுமை... குளிர்ச்சி. 


ஊசியிலைக் காடுகள் ஒருபக்கமாகவே சாய்ந்திருந்தன... மஞ்சுகளின் சுமை தாங்காமல்.