திங்கள், 7 அக்டோபர், 2013

இளஞ்சிவப்பு நகரம் ஜெய்பூர்

ஜெய்பூர் கோட்டைகளும் அரண்மனைகளும் நிறைந்த நகரம். ஒவ்வொரு அரண்மனைகளிலும் கோட்டைகளிலும் அதனை உருவாக்கியவர்களின் கலைத் திறமைகள் இன்றும் அழியாமல் அழகாக உள்ளது. ஒருமுறை ஜெய்பூர் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நழுவவிடாதீர்கள். ரசனைக்கு தீனிபோடும் நகரம் ஜெய்பூர்.


தம்பி ஜெய்பூரில் வேலைப் பார்த்து கொண்டிருந்தான். தொடர்ச்சியான பல அழைப்புகளில் ஒன்றன் முடிவாக ஜெய்பூரை சென்றடைந்தேன். சென்ற பிறகுதான் அவன் அழைத்ததன் அர்த்தம் எனக்குப் புரிந்தது.

சாலையோரம் உள்ள அனைத்து கோட்டைகளும் இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்தன. மொத்தத்தில் திருப்பும் திடையெல்லாம் இளஞ்சிவப்புதான் எங்களை வரவேற்றது.

அதில் மிக முக்கியமான, ஜெய்பூர் என்றாலே நினைவிலிருந்து நீங்காமல் நின்று கொண்டிருப்பது இந்த “ ஹவா மகால் “ தான்.  



ஹவா மகாலின் பின்புறத் தோற்றம். புறாக்களின் அரண்மனையாக ஹவா மகால் உள்ளது.





” சிட்டி பேலஸ் “ எனப்படும் இளஞ்செவப்பு நிற அரண்மனையை காண கண்கள் கொள்ளவில்லை. அழகு என்றால் அப்படியொரு அழகில் அரண்மனை இளைக்கப்பட்டிருந்தது.




இது ஆல்பர்ட் ஹால். அருங்காட்சியமாக இருந்து வருகிறது. உள்ளே ஜெய்பூர் மன்னர்களின் அரசாட்சி முறையின் ஓவியங்கள், உடைகள், போர்க் கருவிகளும், ராஜஸ்தானின் கலைப் பண்பாடுகளை விளக்கும் பொருள்களும் உள்ளன.



மன் சாகர் ஏரியின் நடுவில் அமைந்திருப்பது “ ஜல் மகால் அரண்மனை “ யின் அழகுக் காட்சி. இரவில் இந்த அரண்மனையை விளக்கு ஒளியில் காணும் பொழுது அழகின் உச்சத்தில் மிதந்து கொண்டிருக்கும். ஜல் மகாலின் பின்புறம் தெரியும் இளஞ்சிவப்பு நிறக்கோட்டை போன்றது தான்... மன் சாகர் அணை.

1 கருத்து:

  1. பறவை போல உங்கள் புகைப்படக்கருவியும் பலவிதக் கோணங்களில் ஜெய்பூரை கவர்ந்துள்ளது.

    அழகான இடங்கள், அருமையான படங்கள்.

    அன்புடன்,
    சித்திரவீதிக்காரன்

    பதிலளிநீக்கு