மதுரை நாகமலைப் புதுக்கோட்டைக்கும் செக்கானூரணிக்கும்
இடையில் சாலையின் வடக்கு திசையில் அமைந்துள்ளது அழகிய கொங்கர் புளியங்குளம் மலைக் குன்று.
மலைக்கு செல்லும் வழியில் அழகிய மாயன் கோவில் அமைந்துள்ளது. கோவிலின் முன்புறம் உள்ள இரண்டு அரச மரங்கள் கோவிலுக்கு மேலும் அழகு சேர்கிறது. மாயன் கோவிலைக் கடந்து மலை அமைந்திருக்கும் பகுதியை
நோக்கி நடந்தேன். மிக நீண்டத் தோற்றத்துடன் காட்சி தந்தது மலை.
மலைக்கு மேலே செல்ல கைப்பிடியுடன் கூடிய
இரும்பு தகடுகளினால் ஆன படிகள் அமைக்கப்பட்டுள்ளன. படிக்களுக்கு இடது பக்கத்தில் உள்ள பகுதியில் கருப்புசாமி சிலையும், பெண் தெய்வத்தின் சிலை ஒன்றும் உள்ள கோவில் அமைந்துள்ளது. படிகளைக் கடந்து
மேலே சென்றால் சுமார் 2100 வருடங்களுக்கு முந்தைய மூன்று தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்,
100 கற்படுகைகளும் மலையில் வெட்டப்பட்டுள்ளன. குகை போன்ற அமைப்பின் அழகை பார்த்ததும் கற்கால
வாழ்வியல் முறை நினைவுக்கு வந்தது.


மலையின் இடது புறத்தில் உள்ள மலைப்பகுதியில் மகாவீரரின் சிலை
புடைப்புச் சிற்பமாக வெட்டப்பட்டுள்ளது. மலையின் அனைத்து பகுதிகளும் செம்மண் நிறத்தில்
காட்சி தந்தது.





இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமணத்துறவிகள் தங்கியிருந்த குகைத்தளத்திற்கு படங்களின் வாயிலாக எங்களை அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
பதிலளிநீக்கு- அன்புடன்,
சித்திரவீதிக்காரன்