நத்தம் அருகேயுள்ள மலைப் பகுதிக்கு ஒருமுறை
சென்ற போது வண்ணத்துப்புச்சிகளின் இருப்பிடத்திற்கே சென்றுவிட்டது போல ஒரு காட்சி.
எங்கு பார்த்தாலும் வண்ணத்துப்புச்சிகளின் படபடப்பான இறக்கைகளின் துடிப்புகளை காண முடிந்தது.
ஒரு சில பட்டாம்பூச்சிகளை நிழற்படம் எடுத்துவிடலாம் என்ற முயற்சியில் இறங்கினேன். பல முறை முயன்று, பல தோல்விகளுக்கு பின்னர்,
கிடைத்த சில காட்சிகள்.
வண்ணத்துப்பூச்சிகள் அனைத்தும் தேனை குடிப்பதில்
முனைப்பாக இருந்தன. ஒவ்வொரு பூவிலும் தேன் உள்ளதா இல்லையா என்று பார்த்துவிட்டு அடுத்தடுத்த
பூக்களுக்கு தாவிக் கொண்டிருந்தன. நானும் பின்னாலேயே தாவிக் கொண்டிருந்தேன் சத்தமில்லாமல்.

வண்ணத்துபூச்சி
தேன் குடிப்பதை ஒருவழியாக படம் எடுத்துவிட்டேன்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக