வெள்ளி, 27 செப்டம்பர், 2013

கீழவளவு மலைகள்

இயற்கையை காதலிப்பவர்களுக்கு, இயற்கை தன்னை பல பரிமாணங்களில் காட்சி தரும். அருவியாக, நதியாக, கடலாக, காடுகளாக, மலைகளாக, பனி மலையாக என இயற்கை பல்வேறு பரிமாணங்களில்  காட்சியளிக்கும். இவைகள், பார்பவர்களின் கண்களை கவர்ந்து, மனதை வருடி, பின்பு மெல்ல நம்மை தனக்கு அடிமையாக்கும். இது காதலின் சக்தி.


இந்த நீரும் மலைகளும் ஒரே மாதிரியான தன்மைகள் உடையவை. கிடைக்கும் இடத்திற்கேற்றவாறு தன் உருவத்தையும், அழகையையும் மாற்றிக் கொண்டே இருக்கும். அதே சமயம் குளிர்ச்சியாகவும் இருக்கும். இரண்டும் சேர்ந்தே பயணிக்கக் கூடியவை. அந்த இரண்டும் கண்களில்பட்டது இனிமையானவை.

அப்படிபட்ட, இயற்கையின் படைப்புகளில் மலைகள் மிகவும் அற்புதமானவைகள். மலைகள் ஒவ்வொன்றும் தனக்கென்ற ஒரு தனி அழகை கொண்டிருக்கும். ஒரு மலையில் ரசித்த அழகு வேறொரு மலையில் வேறொரு தனி அழகைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். மலைகள் ஒவ்வொன்றும் பார்பவர்களின் ரசனைக்கேற்ப காட்சியளிக்கும். மலைகளின் உருவங்கள், வண்ணங்கள், அதன் சிறிதும் பெரிதுமான உயரங்கள் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும்.







வாழ்வின் ஒரு சிறுபகுதியை மலைகளோடு சேர்ந்து வாழ்ந்துவிட்டதால் மலைகள் மீதான காதல் எனக்கு மலைகளைப் போன்றே அழகானது... உறுதியானது. இன்றுவரை மலைகள் மீதான என்னுடைய காதலும் தீரவில்லை... மலைகளும் என்னை விடுவதாக இல்லை. ” மலைகாதல் ”  பயணம் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. இந்த பயணத்தில் கீழவளவு மலைகளும் ஒன்று.

1 கருத்து: