வியாழன், 17 அக்டோபர், 2013

அழகிய உயரத்தில் பள்ளத்துக்காடு...

நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் வழியில் உள்ளது குட்டப்பட்டி என்னும் சிற்றூர். ஊருக்கு மேற்கு பகுதியில் மலையில் அமைந்துள்ள பள்ளத்துக்காடு என்னும் அழகிய மலை கிராமத்திற்க்கு தம்பி மது என்னை அழைத்துச் சென்றான். ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களுக்கிடையே ஒரு பயணம் இடையில் சிறு ஓடையில் நீர் சலசலத்து கொண்டிருந்தது. பறவைகளின் சத்தம் ஆங்காங்கே ஒலித்துக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் காட்டைக் கடந்து மலைப்பயணம் ஆரம்பமாகியது. கூடவே வலியும் கால்களில் ஏறிக்கொண்டது.





மலையின் அனைத்து பகுதிகளும் மரங்களால் சூழப்பட்டு பசுமை நிறைந்திருந்தது. ஓங்கி உயர்ந்து வளர்ந்திருந்த மரங்களைக் கடந்து ஒத்தையடி பாதையில் பயணம்... சற்று திகிலுடனும் கிலியுடனுமாக அமைந்தது.


மலையின் ஏற்றமான பகுதிகள் போலவே... மனதும் உடலின் ஒத்துழைப்பும் மலைக்கு எதிராக ஏற்றமாயிருந்தது. நாக்கு வறள நடந்து கொண்டிருக்கும் போது கண்களுக்கு தெரிந்த காட்சி தான் இது. எப்படியிருந்திருக்கும் அந்த நேரம் என்று நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள். 


பயணம் சற்று கடுமையாக இருந்தாலும் அதன் நிறைவு இயற்கையின் மடியில் எங்களை விட்டுவிட்டது. வாழ்வில் மறக்க முடியாத அனுபவங்களில் பள்ளத்துக்காடும் சேர்ந்து கொண்டது. நிஜத்தில் அப்படியொரு இயற்கை நிறைந்த பகுதி. நகர வாழ்க்கையை விட்டு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ள பகுதி. அதனால்தான் என்னவோ அப்படியொரு அழகை இன்னமும் யாரும் அழிக்காமல் உள்ளனர். இது போன்ற பகுதிகள் மூலம் புவியின் ஆரம்ப அழகை ரசிக்க முடிந்தது.




எல்லாவற்றையும் கண்டு ரசித்துவிட்டு, கரடுமுரடான மலைப்பாதை வழியாக நடந்து கொண்டிருந்தோம். தூரத்தில் மனித நடமாட்டமுள்ள வழியைக் கண்டோம். அப்போது மனதில் தோன்றியது, வீட்டில் தொலைக்காட்சியில் டிஸ்கவரி சேனலில் வரும் ” மேன் வெர்சஸ் வய்ல்ட் “ நிகழ்ச்சியின் கடைசி நிகழ்வுகள்.

7 கருத்துகள்:

  1. மிகவும் அற்புதமான பதிவு, படங்களும் கண் கவர்பவை. பதிவில் தமிழ் எழுத்துப் பிழைகள் சில உள்ளன. சூலப்பட்டு - சூழப்பட்டு, வரழ - வறள என வர வேண்டும், சரி செய்து கொள்ளுங்கள் தோழரே! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி. இனி வரும் இடுகைகளில் பிழைகள் இல்லாமல் எழுத முயல்கிறேன்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. நத்தத்திலிருந்து செந்துறை செல்லும் வழியில் உள்ளது குட்டப்பட்டி என்னும் சிற்றூர்.

      நீக்கு
  3. photos themselves holh d story

    பதிலளிநீக்கு